/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பதி லட்டில் கலப்படம் திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு
/
திருப்பதி லட்டில் கலப்படம் திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு
திருப்பதி லட்டில் கலப்படம் திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு
திருப்பதி லட்டில் கலப்படம் திண்டுக்கல் நிறுவனத்தில் ஆய்வு
ADDED : நவ 24, 2024 02:07 AM

திண்டுக்கல்:திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக, செப்டம்பரில் தகவல் வெளியானது.
லட்டு பிரசாதத்துக்கான நெய், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனமான, ஏ.ஆர்.டெய்ரி சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழுவை அமைத்தது.
இதற்கிடையே, கலப்பட நெய் தொடர்பாக, உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில், அந்த விவகாரத்தை பொதுவெளியில் சொல்லியதற்காக, ஆந்திர அரசை உச்ச நீதிமன்றம் சாடியது. மேலும், விசாரணை நடத்த சி.பி.ஐ., இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழுவை அந்த நீதிமன்றம் அமைத்தது.
மேலும், சம்பந்தப்பட்ட திண்டுக்கல் நிறுவனத்தில், மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர், 14 மணி நேரம் சோதனை நடத்தி, மாதிரிகளை எடுத்துச் சென்றார்.
இந்நிலையில் கலப்பட நெய் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் சோதனை நடத்த நேற்று மூன்று கார்களில் வந்தனர்.
மதியம் துவங்கிய சோதனை மாலை 6:00 மணிக்கு பிறகும் நீடித்தது. ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது.

