/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெட்டிக்கடை தோறும் புகையிலை விற்பனை... எங்கும் ஜோர்: நடவடிக்கை இல்லாததால் பாதிக்கும் சிறார்கள்

ADDED : ஆக 15, 2025 02:26 AM

தடை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க ,பறி முதல் செய்து அபராதம் விதிக்க உணவுப் பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன. மாவட்டத்தில் ஓராண்டுகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக நுாற்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில்லரை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, வழக்கு போடுவது என கணக்கு காட்டும் அதிகாரிகள் இவற்றின் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்வதில்லை. இதனால் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
மேலும் பள்ளி, கல்லுாரி அருகே மாணவர்கள், சிறார்களை குறிவைத்து சர்வ சாதாரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதால் இவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண்டறிந்து கண்டித்தாலும் அவர்களுக்கு தெரியாமல் பழக்கத்தை தொடரும் போக்கும் தென்படுகிறது.பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. போலீசார், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி முற்றிலுமாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.