/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
/
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
ADDED : நவ 03, 2024 04:10 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் முன்னோரது கல்லறை சென்று பூக்களால் அலங்கரிக்க மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் நாளை கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர்.
இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா இளைப்பாறுதல் பெறவேண்டி கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி திண்டுக்கல் -திருச்சி ரோடு கல்லறை தோட்டத்தில் ஏராளமனோர் நேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். காலை 6:00 மணியிலிருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கல்லறை தோட்டத்துக்கு வந்தனர்.
கல்லறைகளுக்கு பலுான்கள் கட்டி பறக்கவிட்டும், விதவிதமான பூக்களால் அலங்காரம் செய்தனர். உணவு படைத்து மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
பாதிரியார்கள் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டது. இதேபோல் ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, ராமையன்பட்டி, மேற்குமரியநாதபுரம், சவேரியார்பாளையம் உள்ளிட்ட பகுதி கல்லறைகளிலும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் கல்லறைகள் அலங்கரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்ற முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாதிரியார்கள் எட்வர்டு, பால்ராஜ் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி தோமையார் சர்ச்சில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை வட்டாரத்தில் மைக்கேல் பாளையம், மரியாயி பாளையம், அம்மாபட்டி, சங்கராபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் கல்லறை திருநாள் வழிபாடு நடைபெற்றது.
வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கி உள்ளவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர்.