/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் திரண்ட சுற்றுலா பயணியர்
/
'கொடை'யில் திரண்ட சுற்றுலா பயணியர்
ADDED : ஜன 07, 2024 12:13 AM
கொடைக்கானல்;கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணியர் மலை நகரில் முகாமிட்டனர்.
சில தினங்களாக கொடைக்கானலை சூழ்ந்த பனிமூட்டம் , தொடர் சாரல் மழை நீடித்து மலைநகர் சில்லிட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்று காலை முதலே மிதமான வெயில் பளிச்சிட்டது.
தொடர்ந்து மழையின் தாக்கம் குறைந்த நிலையில் நகர் ரம்யமாக காட்சியளித்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனசுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது மேகக்கூட்டம் தரையிறங்கியது.