/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமடைந்த மின்கம்பத்தால் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
/
சேதமடைந்த மின்கம்பத்தால் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
சேதமடைந்த மின்கம்பத்தால் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
சேதமடைந்த மின்கம்பத்தால் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 05, 2025 02:34 AM

குப்பையால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பும் ஏற்படுவதால் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னகாளை, திண்டுக்கல்.
.............---------
வீணாகும் குடிநீர்
வத்தலகுண்டு ரெட்டியபட்டி கிழக்கு தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது. இதனால் சகதியாக மாறி அப்பகுதியில் செல்வோர் கீழே விழுகின்றனர் . இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமராஜன், ரெட்டியபட்டி..................---------பலகையில் எரியாத விளக்கு
பழநி பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதி கூறையில் வைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் பெயர் பலகையில் மின்விளக்கு சில பழுதடைந்து எரியாமல் உள்ளது .இதன் மின் விளக்குகளை சரி செய்ய உள்ளாட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்மல்குமார், பழநி.
........----------
கொசுக்கள் உற்பத்தி
திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி ரோட்டோரத்தில் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கழிவு நீர் நிறைந்து ரோட்டில் செல்வதால் இதன் மீது நடவடிக்கை வேண்டும் .பழனிச்சாமி, திண்டுக்கல்.
..............----------ரோட்டில் திரியும் தெரு நாய்கள்
ஒட்டன்சத்திரம் நகராட்சி மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த உள்ளாட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . -குமார் ஒட்டன்சத்திரம்.
........----------அங்கன்வாடியை சுற்றி புதர்
அய்யலுார் காக்காயன் குளத்துப்பட்டி அங்கன்வாடி மையத்தை சுற்றி புதர்கள் மண்டி உள்ளதால் விஷ பூச்சிகள் புகலிடமாக உள்ளது.அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைஅகற்ற வேண்டும். --பாண்டி, அய்யலுார்.
..............----------விபத்து அபாயம்
கொடைக்கானல் கலையரங்கத்தில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. மின்வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இப் பகுதியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மாரிமுத்து அப்சர்வேட்டரி .
..............---------