/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 29, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : பள்ளி விடுமுறையைடுத்து கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இங்கு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. நேற்று மதியம் லேசான சாரல் மழை பெய்ததால் மலை நகர் சில்லிட்டது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்க குளிரும் நிலவியது.