/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 13, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டுவரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் சட்டம் 1982 அதன் கீழ் இயங்கும் 18 நல வாரியங்களையும் முறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் திண்டுக்கல்லில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு டி.எம்.கே.டி.எஸ்., மாவட்ட தலைவர் பொன்னாண்டவர் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க செயலர்கள் மணிவேல், ஜெயராம், நடராஜ் முன்னிலை வகித்தனர். மண்பாண்ட தொழிலாளர் சங்க செயலர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.