/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து காய்கறி மாலை அணிந்து வந்த வியாபாரிகள்

ADDED : மார் 18, 2025 05:32 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து காய்கறி மாலையணிந்து வந்த வியாபாரிகள் கலெக்டர் சரவணனிடம் முறையிட்டனர்.
சின்னாளப்பட்டியில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒருங்கிணைப்பாளர் நாகபாண்டி தலைமையில் வியாபாரிகள் காய்கறி மாலை அணிந்தப்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
மனு வாயிலாக கலெக்டரிடம் முறையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: மார்க்கெட்டில் 85 கடைகளில் வியாபாரம் நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், கட்டடம் பழையதாகிவிட்டதால் கலெக்டர் உத்தரவின் படி இடிப்பதாகவும், இங்குள்ளோருக்கு மாற்று இடம் ஏற்படுத்த உள்ளோம் என குறிப்பாணை ஏதும் காட்டாமல் கையெழுத்து வாங்கி சென்றனர்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் லாபத்தை கணக்கில் கொண்டு புதியதாக கட்ட உள்ள கட்டடத்திற்கு அதிக தொகைக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.
1984ல் இதேபோல் ஏலம் நடந்தபோது தகராறு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டது.
அதன்பின் மார்க்கெட்டில் ஏலம் நடக்காது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கட்டடத்தை இடிப்பதை நிறுத்தி வைக்கவும், தற்போதைய நடைமுறையே தொடரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.