UPDATED : ஆக 13, 2026 09:57 PM
ADDED : ஆக 13, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:சுரங்கப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்புத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலசெந்தில்நாதன் செய்திக்குறிப்பு:
திண்டுக்கல் குஜிலியம்பாறை கரூர் ரோட்டில் அமைந்துள்ள சுரங்கப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஆக.,14 முதல் ஆக.,16 வரை 3 நாட்கள் சுரங்கப்பாலம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு செல்லும் வாகனங்கள் திருச்சி ரோட்டை மாற்று வழியாக பயன்படுத்தி கரூர் ரோட்டிற்கு செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
