UPDATED : அக் 28, 2026 09:59 PM
ADDED : அக் 28, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மா விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி தலைமை வகித்தார். வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முகமதுஆசிப், துணை அலுவலர் ஜெகன்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் காந்திகிராம வேளாண் அறிவியல் மைய தலைவர் செந்தில்குமார் பங்கேற்று நன்னெறி வேளாண் முறைகள் குறித்து விளக்கினார். மா விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
