UPDATED : நவ 14, 2026 06:54 PM
ADDED : நவ 14, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஒன்றிய ஆணையாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பிரதீவ், குழந்தைகள் திட்ட அலுவலர்கள் நிவேதா, பொதியழகி, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், சத்துணவு மேலாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யோகா நிறுவனர் முரளிதரன் பங்கேற்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது, உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளித்து பேசினார். தொடர்ந்து உணவு பொருட்களை மாசுபடாமல் பாதுகாப்பது, மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
