ADDED : பிப் 18, 2024 01:28 AM

திண்டுக்கல்: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நாடாளுமன்ற பரப்புரையை தி.மு.க., தொடங்கியுள்ளது. இதற்காக திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று கூட்டம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்திற்கு மதியம் 3 :00மணியிலிருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அழைத்து வரபட்டனர். இவர்கள் தி.மு.க., கொடி கட்டிய லோடு ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டனர். ஆளும்கட்சி விழா என்பதால் விதிமீறல் கண்களுக்கு தெரிந்தும் போலீசார் ,வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுக்காது வேடிக்கை பார்த்தனர்.
இதன் வாகனங்கள் திருச்சி ரோடு, சாலை ரோடு, ஏ.எம்.சி., ரோடு என ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் தடுமாறினர். நகர் முழுவதும் பேனர்கள், ரோட்டை குடைந்து கொடிக்கம்பங்கள் என ஊன்றி வைத்திருந்தனர். இதனால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.