/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
/
மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
ADDED : செப் 18, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம், திண்டிமாவனம் சேர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.30 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து முதற்கட்டமாக 15,000 மரக் கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலை பெருமாள்கோவில் பட்டியில் 7800 மரக்கன்றுகளை நடப்பட்டது.இது போல் திண்டுக்கல்-திருச்சி ரோடு இ.பி.காலனியில் 900 மரக்கன்று நடப்பட்டது.
இதை கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜ் குமார் கலந்து கொண்டனர்.