/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் இன்று போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைக்க சோதனை நடவடிக்கை
/
பழநியில் இன்று போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைக்க சோதனை நடவடிக்கை
பழநியில் இன்று போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைக்க சோதனை நடவடிக்கை
பழநியில் இன்று போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைக்க சோதனை நடவடிக்கை
ADDED : ஆக 24, 2025 03:43 AM
பழநி: பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று ஒரு நாள் (ஆக.24 ) மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பழநி நகரில் வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து இருப்பதால் தைப்பூசம், பங்குனி உத்திரம், விழா காலங்கள் ஆகியவற்றில் பழநி நகர், அடிவாரம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய தற்காலிகமாக சோதனை அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை போக்குவரத்து பாதைகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புது தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பழநியிலிருந்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி நெய்க்காரப்பட்டி, கீரனுார் மார்க்கமாக செல்லும் அனைத்து நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள் புது தாராபுரம் ரோடு வேல் ரவுண்டான, தீயணைப்பு நிலையம், வழியே ஆர்.சி., சர்ச் எதிரே உள்ள ராஜேந்திர ரோடு வழியாக சென்று சஞ்சய் மருத்துவமனை , சுப்பிரமணியபுரம் ரோடு, ராஜாஜி ரோடு வழியாக ஒரு வழிப்பாதையில் செல்ல வேண்டும். இந்தப் பாதையில் ஆர்.சி., சர்ச் எதிரே தற்காலிக பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நெய்க்காரப்பட்டி, கீரனுார் பகுதிகளில் இருந்து பழநிக்கு வரும் வாகனங்கள் ராஜாஜி ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, ரெணகாளியம்மன் கோயில் ஜங்ஷன், புது தாராபுரம் ரோடு வேல் ரவுண்டானா வழியாக வரவேண்டும். இந்த வழியே வரும் பஸ்கள் ரெணகாளியம்மன் கோயில் அருகே உள்ள பெஸ்ட் ஹாஸ்பிடல் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் டூவீலர்களுக்கு பொருந்தாது.
தாராபுரம், தொப்பம்பட்டி மார்க்கமாக பழநி வரும் பஸ்கள் புது தாராபுரம், ரெணகாளியம்மன் கோயில் வழியே வந்து காவலர் குடியிருப்பின் அருகில் உள்ள விநாயகர் கோயில் அருகே ஏற்படுத் தப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
பழநியில் இருந்து தாராபுரம், தொப்பம்பட்டி செல்லும் பஸ்கள் ரெணகாளியம்மன் கோயில் எதிரே உள்ள தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.