/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 29, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மதுரை கே.புதுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காளிதாஸ் 28. இவர் 2021ல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாக கூறி அவரை அழைத்து சென்று காளிதாஸ் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக காளிதாஸ் மீதான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
காளிதாஸூக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.15 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் மைதிலி ஆஜரானார்.