/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காச நோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
/
காச நோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ADDED : மார் 16, 2025 06:33 AM

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் சர்வதேச காச நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காசநோய் மையத்தின் துணை இயக்குநர் முத்துபாண்டியன் தலைமையில் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ,மருத்துவ மாணவர்கள் இடையே காசநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் சிட்டி ஸ்கொயர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
4 அணிகள் பங்கேற்றன. போட்டியை மாவட்ட இந்திய மருத்துவ சங்க செயலாளர் லலித் குமார் , மாவட்ட காசநோய் மையம் சந்திரகுமார் தொடங்கி வைத்தனர். வெற்றி பெறும் அணிகளுக்கு மார்ச் 24 உலக காச நோய் தினத்தன்று பரிசுகள், கேடயம், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.