ADDED : டிச 15, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : தாடிக்கொம்பு உலகம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பழனிக்குமார் 23. டூவீலரில் காக்காதோப்பு பிரிவு அருகே சென்றபோது அலைபேசியில் அழைப்பு வந்ததால் டூ வீலரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த இருவர் முகவரி கேட்பது போல் பேசி முகவரி பேப்பரை கோடுக்க அதை பழனிக்குமார் கையில் வாங்கி பார்த்த போது அலைபேசியை பறித்துக்கொண்டு தப்பினர். வேடசந்துார் போலீசார் சி.சி.டிவி., பதிவுகளை ஆய்வு செய்து, காளனம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் 22, அஜித்குமார் 25, ஆகிய இருவரை கைது செய்தனர்.