தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரயிலில் கஞ்சா கடத்திய இரு தம்பதிகள் கைது: எஸ்.பி., நேரில் விசாரணை

ரயிலில் கஞ்சா கடத்திய இரு தம்பதிகள் கைது: எஸ்.பி., நேரில் விசாரணை

ரயிலில் கஞ்சா கடத்திய இரு தம்பதிகள் கைது: எஸ்.பி., நேரில் விசாரணை


UPDATED : நவ 26, 2026 09:42 PM

ADDED : நவ 26, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 09:42 PM ADDED : நவ 26, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைரோடு:

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இரு கேரள தம்பதிகளை கொடைரோடு அருகே போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மையநாயக்கனுார் போலீசார் கொடைரோடு அருகே சோதனையில் ஈடுபட்டனர். ஜல்லிப்பட்டி ரயில்வே பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களிடம் சோதனை செய்ததில் 5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர்கள் கேரளம் எர்ணாகுளம் செபாஸ்டின் சனு 38, அவரது மனைவி நாகையகவுண்டன்பட்டி கஸ்துாரி 32, கொச்சி முன்டன்வேலி அபிலேஷ் 27, அவரது மனைவி அகிலா 21, என தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை கைப்பற்றினர்.

இதுகுறித்து நேரில் விசாரித்த எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், ‘இந்தாண்டில் கஞ்சா கடத்தல் தொடர்பாக 397 வழக்குகள் பதிந்து 640 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 288 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 16 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us