/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தொட்டிக்குள் பெயின்ட் அடிக்க சென்ற இருவர் மயக்கம்
/
தண்ணீர் தொட்டிக்குள் பெயின்ட் அடிக்க சென்ற இருவர் மயக்கம்
தண்ணீர் தொட்டிக்குள் பெயின்ட் அடிக்க சென்ற இருவர் மயக்கம்
தண்ணீர் தொட்டிக்குள் பெயின்ட் அடிக்க சென்ற இருவர் மயக்கம்
ADDED : ஆக 14, 2025 02:50 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பெயின்ட் அடித்தபோது விஷவாயு தாக்கி இருவர் மயங்கினர்.
திண்டுக்கல் நாராயணன்பிள்ளை தோட்டப்பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் வீட்டில் பெயின்ட் அடிக்க தொழிலாளர்கள் வந்தனர்.
தரைமட்ட தண்ணீர் தொட்டியில் பெயின்ட் அடிக்க செல்லாண்டியம்மன் கோயில் வடக்குத்தெருவை சேர்ந்த தினேஷ்குமார் 28 இறங்கினார். வெகுநேரமாகியும் தினேஷ்குமாரிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்த உடன் பணிக்கு வந்த நாகமணி 22, தொட்டிக்குள் இறங்கி பார்த்தார்.
அப்போது சுவற்றில் சாய்ந்தவாறு தினேஷ்குமார் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மேலேகொண்டுவர முயற்சித்தபோது நாகமணிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவர் சக தொழிலாளர்களை அழைத்தபடி மயங்கி விழுந்தார். தீயணைப்புபடையினர் வந்து தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் வினோதா விசாரிக்கிறார்.