/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த இடையகோட்டை அரசு பள்ளி மாணவிகள்

ADDED : ஆக 30, 2024 11:34 AM

இடையகோட்டை: இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தனர்.
இடையகோட்டையை சேர்ந்த விவசாயி செல்லமுத்து, முத்துலட்சுமி மகள் பிரதீபா அங்குள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார். நீட் தேர்வில் 551 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றார். மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட இவர் தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தார்.
இதே போல் ஜவுளி வியாபாரி முகமது ரஷீத், சாஜிதா பர்வீன் மகள் ரவுலதுல் ஜன்னா நீட் தேர்வில் 525 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பெற்றார். கலந்தாய்வில் 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தார். இவர்களுக்கு இடையகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாணவிகள் கூறியதாவது:மருத்துவராக வேண்டும் என்பது எங்களுடைய கனவாக இருந்தது. பள்ளியில் சனி, ஞாயிறு ,விடுமுறை நாட்களில் சிறப்பாக கோச்சிங் கொடுத்தனர். முதல் முயற்சியில் மதிப்பெண் குறைவாக கிடைத்தது. தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் ஊக்குவிப்பால் அடுத்த முயற்சியில் எங்களது கனவு நனவாகி உள்ளது என்றனர்.