ADDED : ஜன 08, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : கன்னிவாடி வனச்சரக பகுதி உட்பட்ட மலையடிவார கிராமங்களில் காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இவற்றை கட்டுப்படுத்த விவசாயிகள் பலர் அனுமதியற்ற மின் வேலி அமைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே வாய்ப்பை பயன்படுத்தி சிலர் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக பாரஸ்டர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர், ஆத்துார், சித்தையன் கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
ஆத்துாரைச் சேர்ந்த விவசாயி கண்ணன் தனது நிலத்தில் அனுமதியின்றி கம்பி வலை மூலம் மின் வேலி அமைத்திருந்தார். பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரை கைது செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.