sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பராமரிப்பற்ற விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு முற்றுப்புள்ளி : விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

/

பராமரிப்பற்ற விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு முற்றுப்புள்ளி : விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

பராமரிப்பற்ற விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு முற்றுப்புள்ளி : விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை

பராமரிப்பற்ற விளம்பர போர்டுகள், பேனர்களுக்கு முற்றுப்புள்ளி : விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை தேவை


UPDATED : மார் 16, 2026 09:53 AM

ADDED : மார் 16, 2026 06:13 AM

Google News

UPDATED : மார் 16, 2026 09:53 AM ADDED : மார் 16, 2026 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகளின் நடுவில் உள்ள விளம்பர போர்டுகள், பேனர்கள், கட்டடங்களின் மாடியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் பராமரிப்பின்றி உள்ளன. அவை கீழே விழுந்து உயிர் பலி வாங்கும் முன் அப்புறப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நிறுவனம், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் அவற்றின் பெயர் எழுதப்பட்ட பேனர்கள் ரோட்டின் சந்திப்புகளில் வைக்கப்பட்டு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த போர்டுகள் மழையில் நனைந்து இவற்றை தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் துருப்பிடித்து உள்ளன. காற்று பலமாக வீசும் போது இவை கீழே விழுவதற்கு தயாராக உள்ளன.

இவற்றை கவனித்து அப்புறப்படுத்தாவிட்டால் ரோட்டில் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மீது பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. உயிர் பலி ஏற்படுத்த காத்திருக்கும் இத்தகைய போர்டுகளை கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டு முயற்சி அவசியம்


ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், போர்டுகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதிய பராமரிப்பு இல்லாதது தெரிந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். ஒளிரும் விளக்குகள் எரிகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். விபரீதம் நடப்பதற்கு முன் விழித்துக் கொண்டால் விபத்துகளை தடுக்கலாம். விளம்பரதாரர்கள், அதிகாரிகள் கூட்டு முயற்சி அவசியம் தேவை.

- டி.ஹெரால்டு ஜாக்சன், பேராசிரியர், ஒட்டன்சத்திரம்.






      Dinamalar
      Follow us