sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி முருகன் கோயிலில் 'வின்ச்' சேவை பாதிப்பு

/

 பழநி முருகன் கோயிலில் 'வின்ச்' சேவை பாதிப்பு

 பழநி முருகன் கோயிலில் 'வின்ச்' சேவை பாதிப்பு

 பழநி முருகன் கோயிலில் 'வின்ச்' சேவை பாதிப்பு


ADDED : மார் 16, 2026 02:11 AM

Google News

ADDED : மார் 16, 2026 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: மின் கேபிள் பழுது காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் 'வின்ச்' சேவை நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பாதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

பழநி முருகன் கோயிலுக்கு செல்ல வின்ச், ரோப் கார் சேவைகள் உள்ளன. இங்கு மூன்று 'வின்ச்'கள் செயல்படுகின்றன. இதன் மூலம் பக்தர்கள் 15 நிமிடங்களில் கோயிலுக்கு செல்ல முடியும்.

ஒரு வின்ச்சில் 35 நபர்களுக்கு மேல் செல்ல முடியும். அதிகாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை இந்த சேவை உள்ளது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வின்ச் சேவை தொடங்கியபோது மின் கேபிள்களில் தீப்பொறி கிளம்பியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேல் தளத்தில் உள்ள இயந்திரங்கள் இயங்கவில்லை. மூன்று வின்ச் பெட்டிகளும் கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. கோயில் பொறியாளர்கள், அதிகாரிகள் பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ரோப் கார், படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us