/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறக்கப்படாத ரேஷன்கடை; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்
/
திறக்கப்படாத ரேஷன்கடை; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்
திறக்கப்படாத ரேஷன்கடை; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்
திறக்கப்படாத ரேஷன்கடை; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்
ADDED : நவ 14, 2024 07:08 AM
பழநி; பழநி நகராட்சி கூட்டத்தில் திறக்கப்படாத ரேஷன்கடை தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி தி.மு.க., கவுன்சிலர் காளீஸ்வரி பேசினார்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்), பொறியாளர் ராஜவேலு, நகர் நல அலுவலர் மனோஜ் குமார், நகர அமைப்பு அலுவலர் புவனேஷ்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், மேலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
மகேஸ்வரி (தி.மு.க.,): நாய் தொல்லை அதிகம் உள்ளது.
நகர் நல அலுவலர்: விலங்குகள் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.
காளீஸ்வரி (தி.மு.க.,): எங்கள் பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்துள்ளது. ஆனால் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
தலைவர்: விரைவில் ரேஷன் கடை திறக்கப்படும்.
ராசு (அ.தி.மு.க.,): காமராஜர் நகரில் சுகாதார வளாகம் மோட்டார் பழுதாகி பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
தலைவர் : நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ் (தி.மு.க.,): ஜிகா பைப் லைன் திட்டத்தில் தினமும் தண்ணீர் வழங்க வேண்டும். காரமடை பகுதியில் உள்ள இடத்தை கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அந்த இடம் யாருக்கு சொந்தமானது. வரிவிதிப்பு உள்ளதா. நீதிமன்ற வளாகத்திற்கு வரிவிதிப்பு செய்யப்படுகிறதா.
தலைவர்: கோயில் இடங்கள், நீதிமன்ற பகுதி குறித்து ஆய்வு செய்து வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விமல பாண்டியன் (தி.மு.க.,) : நகராட்சிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 19 கோடி ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது.
சுரேஷ் (தி.மு.க.,): நகராட்சி வருவாய் அதிகரிக்க வார்டு வாரியாக கடைகள் அமைக்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை எப்படி தீர்வு செய்வீர்கள்.
நகரமைப்பு அலுவலர்: 43 துாய்மை பணியாளர்களை நியமிக்க அனுமதி கிடைத்துள்ளது . சன்னதி வீதியை தூய்மைப்படுத்த கோயில் நிர்வாகத்திடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீனதயாளன் (தி.மு.க.,): கோயில் நிர்வாகத்திடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை
விமலா பாண்டியன் (தி.மு.க.,): சன்னதி வீதி குறித்த நீதிமன்ற நிலைப்பாடு என்ன. தற்போது சீசன் துவங்க உள்ளதால் அங்கு பணிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.
தலைவர்: சீசன் துவங்கி விட்டால் பணிகள் செய்ய இயலாது.
இவ்வாறு விவாதம் நடந்தது