/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மர்ம காய்ச்சல் தடுக்க கொசு மருந்து அடியுங்க ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
மர்ம காய்ச்சல் தடுக்க கொசு மருந்து அடியுங்க ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மர்ம காய்ச்சல் தடுக்க கொசு மருந்து அடியுங்க ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
மர்ம காய்ச்சல் தடுக்க கொசு மருந்து அடியுங்க ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2024 05:17 AM
ஒட்டன்சத்திரம்: மர்ம காய்ச்சல் பரவுவதால் வார்டு முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி கூட்டம் தலைவர் திருமலைசாமி (தி.மு.க.,)தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வெள்ளைச்சாமி (தி.மு.க.,), கமிஷனர்
சுப்பிரமணிய பிரபு முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், வருவாய் ஆய்வாளர் விஜய பால்ராஜ், மேலாளர் ரவி, கணக்காளர் சரவணன் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் விவாதம்:
கண்ணன் (தி.மு.க.,): ஒட்டன்சத்திரம் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 18 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்: நடவடிக்கை எடுக்கப்படும்
கனகராஜ் ( தி.மு.க.,): ஏழாவது வார்டில் நகராட்சியின் அனுமதி இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அங்கீகாரமில்லாத இத்தகைய கட்டடங்களுக்கு வீட்டு வரி எவ்வாறு வசூல் செய்கிறீர்கள்.
கண்ணன் (தி.மு.க.,): அப்ரூவல் இல்லாத வீடுகளுக்கு ரசீதுகள் ஏன் கொடுக்கிறீர்கள்.
கமிஷனர்: நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கனகராஜ் ( தி.மு.க.,): நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக எழுதிக் கொடுங்கள். இதை அனைத்து கவுன்சிலர்களும் ஆதரித்தனர்..
தலைவர்: அனைத்து வார்டுகளிலும் செய்யப்பட்ட திட்டப் பணிகள் குறித்து தெரியப்படுத்த அதிகாரிகளிடம் கூறினார்.
ஜெயமணி (தி.மு.க.,): ஜூலையில் அஜெண்டாவில் வைத்த வேலைகள் இதுவரை செய்யவில்லை. ஏதாவது வேலைகள் செய்யச் சொன்னால் நிதி பற்றாக்குறை என்கிறீர்கள். கவுன்சில் கூட்டம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அந்தந்த வார்டுகளுக்கு என்ன தேவை என்பதை சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்டறிந்து அஜெண்டாவில் சேர்க்க வேண்டும்.
தலைவர்: அடுத்த கூட்டத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணன், கனகராஜ் ( தி.மு.க.,): : 2022 முதல் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் செலவழிக்கப்பட்ட நிதி குறித்த வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கமிஷனர்: நடவடிக்கை எடுக்கப்படும்
ஜெயமணி ( தி.மு.க.,) : காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் போடப்படும் பணிகளுக்கான சட்ட திட்டங்கள், விதிமுறைகளை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தவும், சாஸ்தா நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறுகிறது. நான்கு மாதங்களாகியும் சரி செய்யவில்லை.
கண்ணன் ( தி.மு.க.,): அந்தந்த வார்டுகளில் நடைபெறும் வேலைகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
தலைவர்: வார்டுகளில் செய்யும் வேலைகளை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கண்ணன் ( தி.மு.க.,): : கோழி கழிவுகளை ஆற்றில் கொட்டுகின்றனர். கழிவுகளை கொட்டும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
முகமது மீரான் (காங்.,): 12 வது வார்டில் உள்ள போர்வெல்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் கேட்டதில் வார்டில் உள்ள நகராட்சி போர்வெல் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
கமிஷனர்: ரிக்கார்டில் உள்ளதை தெரிவித்துள்ளோம்.
முகமது மீரான் (காங்.,): அந்த இடத்தை சர்வே செய்து விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

