/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் வள்ளி கும்மியாட்டம்
/
பழநி கோயிலில் வள்ளி கும்மியாட்டம்
ADDED : மே 30, 2025 03:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் வேடசந்துாரைச் சேர்ந்த வள்ளி கும்மி நடன குழுவினர் வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர்.
பழநியில் ஜூன் 3, வைகாசி விசாகத் திருவிழா துவங்குவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வருகின்றனர். சிலர் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
நேற்று வேடசந்துார் மேல் மத்தினி கிராமத்தை சேர்ந்த கந்தன் கும்மி கலை குழு பெண்கள், பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.அவர்கள் வரிசையில் நின்று வள்ளிகும்மி , கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடினர்.