/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ரோட்டில் திடீர் பள்ளம்; விபத்து அபாயத்தில் வாகனங்கள்
/
'கொடை' ரோட்டில் திடீர் பள்ளம்; விபத்து அபாயத்தில் வாகனங்கள்
'கொடை' ரோட்டில் திடீர் பள்ளம்; விபத்து அபாயத்தில் வாகனங்கள்
'கொடை' ரோட்டில் திடீர் பள்ளம்; விபத்து அபாயத்தில் வாகனங்கள்
ADDED : அக் 08, 2025 06:37 AM

கொடைக்கானல்; கொடைக்கானல் ரோட்டில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா நகருக்கு கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோடு பிரதானம் என்ற நிலையில் சில வாரங்களுக்கு முன் பெய்த கன மழையில் பெருமாள்மலை பகுதியில் உள்ள வளைவு பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கொடைக்கானல் ஆனந்தகிரி 4வது தெரு ,ஆர்.டி.ஒ., அலுவலகம் செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நாயுடுபுரம் பகுதி உள்ளிட்ட இடங்களில் இது போன்ற பள்ளங்கள் ஏற்பட்டு சீரமைக்காத நிலையில் நாள்தோறும் வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. திடீர் பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .