/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லெக்கையன் கோட்டையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
/
லெக்கையன் கோட்டையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
ADDED : அக் 30, 2024 05:19 AM

ஒட்டன்சத்திரம் : தீபாவளியை முன்னிட்டு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் மூலச்சத்திரம் லெக்கையன்கோட்டை இடையே போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்றன. லெக்கையன்கோட்டை, மூலச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் மெதுவாக உயர்ந்து அதிகப்படியான வாகனங்கள் சென்றதால் பல கிலோமீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்து போலீசார் நெரிசலை சீர் செய்தனர்.