தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி: காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி: காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி: காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி


ADDED : நவ 21, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. தீபம் ஏற்றுவதில் முந்தைய தி.மு.க., அரசுக்கும் தற்போதைய த.வெ.க., அரசுக்கும் உடன்பாடு இல்லை. இவர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த ஆண்டு தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது முருக பக்தர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

ஹிந்துக்கள் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறையில் கடவுள் நம்பிக்கை இல்லாத அதிகாரிகள் இருப்பதால் மோசமாக உள்ளது. கோயில்களை விட்டு ஹிந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும். பழநியில் தைப்பூசத் திருவிழாவிற்கு அதிக வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us