/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது விஸ்வ ஹிந்து பரிஷத் வருத்தம்
/
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது விஸ்வ ஹிந்து பரிஷத் வருத்தம்
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது விஸ்வ ஹிந்து பரிஷத் வருத்தம்
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது விஸ்வ ஹிந்து பரிஷத் வருத்தம்
ADDED : மார் 06, 2024 05:54 AM
பழநி : '' ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது'' என விஸ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்பாளர் கேசவராஜ் தெரிவித்தார்.
பழநியில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் தேசியத்திற்கும், தர்மத்திற்கும் ஆதரவாக ஹிந்து சமுதாய நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் கட்சிக்கு 100 சதவீத ஹிந்துக்களும் ஓட்டளிக்க வேண்டும்.
மதமாற்றம் ஊக்குவிக்கப்பட்ட காலத்தில் ஹிந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஆறுமுக நாவலரின் பணிகளை கிராமம் தோறும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஹிந்து திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பதை தடுக்க தடை அறிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பசு மாடு கடத்தலை தடுக்க தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு பிராணி வதை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை மருந்து கடத்தல் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து போதை பழக்கத்தை இந்த மண்ணை விட்டு அடியோடு அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்காக 5.5 கோடி கிராமங்களுக்குச் சென்று 17 கோடி குடும்பத்தினரை சந்தித்து அட்சதைகள் வழங்கப்பட்டன. ராமாயண காலத்தில் 14 வருடம் ராமர் வனவாசம் சென்றார் .
அதுபோல் 495 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பால ராமர் கோயில் கட்ட அங்கு எழுந்தருளி உள்ளார். மதமாற்றத்தால் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழக தலைவர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.

