ADDED : நவ 12, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்கம் சார்பில் பழநி அடிவாரம் பகுதி சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காத்திருப்புப் போராட்டம் பழநி சப் கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தாசில்தார் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்படாததால் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 150 க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.