/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் நாளை நடையடைப்பு
/
பழநி முருகன் கோயிலில் நாளை நடையடைப்பு
ADDED : அக் 11, 2024 03:05 AM

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நாளை (அக்., 12) நடக்கும் வன்னிகா சூரன் வதத்தை தொடர்ந்து முருகன் கோயில் நடை மதியம் 3:15 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள் நாளை காலை 11:30 மணி முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பழநி முருகன் கோயில் துணை கோயிலான பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் வன்னிகா சூரன் வதம் நடக்கிறது. இதற்காக பழநி கோயிலிருந்து பராசத்தி வேல் வரும் நிலையில் பக்தர்கள் காலை 11:00மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இதையடுத்து பழநி கோயிலில் மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது.
மதியம் 3:15 மணிக்கு மலைக்கோயில் நடை அடைக்கப்படுகிறது. அதன்பின் பராசக்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும். அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட கோதை மங்கலம் கோதீஸ்வரர் கோயில் வளாகத்தில் வன்னிகாசூரன் வதத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய வேல் முருகன் கோயில் செல்கிறது. அதன் பிறகு அங்கு அர்த்த சாம பூஜை நடக்கிறது.