/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வெளிநாட்டு தம்பதிக்கு எச்சரிக்கை
/
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வெளிநாட்டு தம்பதிக்கு எச்சரிக்கை
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வெளிநாட்டு தம்பதிக்கு எச்சரிக்கை
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வெளிநாட்டு தம்பதிக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 09, 2024 05:07 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரத்தில் ரயிலுக்கு காத்திருந்த வெளிநாட்டு தம்பதியினர் புகை பிடித்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
ஐரோப்பா ஜெர்மனியை சேர்ந்த வெளிநாட்டு இளம் தம்பதியினர் சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சுற்றுலா முடிந்து நேற்று காலை 11:55 மணிக்கு திண்டுக்கல் வழியாக மும்பை செல்லும் ரயிலில் பயணிக்க திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். ரயில் வருவதற்கு முன்னதாகவே ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரத்திற்கு வந்த இருவரும் அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பார்ப்பதற்கு இத்தம்பதியினர் வித்தியாசமாக உடை அணிந்திருந்ததால் பயணிகள் இவர்களை ஆச்சர்யமாக பார்த்தனர். ரயில் வர காலதாமதம் ஆனதால் வெளிநாட்டு பெண் பயணி தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே இருந்து சிகரெட்டை பற்ற வைத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனே வந்து ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் 'நோ ஸ்மோக்கிங்' என வெளிநாட்டு தம்பதியை எச்சரித்தனர். அப்பெண் பயணி உடனே சிகரெட்டை கீழே போட்டு அணைத்தார். பின் அவர்களிடம் டிக்கெட் உள்ளதா,எங்கே செல்ல வேண்டும் என பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

