/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீர் நிலைகளில் ஆபத்து குளியல் அதிகரிப்பு- கண்காணியுங்க; தேவையாகிறது அதிகாரிகள் விழிப்புணர்வு

ADDED : டிச 15, 2024 07:38 AM

மாவட்டத்தில் மழை நீரை சேமிக்க ஊருக்கு ஊர் ஊருணி, கண்மாய்களை ஏற்படுத்தி விவசாயம் ,கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் விவசாயம் குறைந்ததால் ஊருணி, கண்மாய்களை துார்வாராமல் கிடப்பில் போட்டனர். தற்போது சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பிஉள்ளது.
இங்கு பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் ஆர்வத்தில் குளிக்கின்றனர். இவர்கள் சில நேரங்களில் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன.
ஊருணி, கண்மாய்கள் வறண்டு காணப்பட்ட போது மணல்கள் திருடப்பட்டு ஆங்காங்கு பள்ளங்களை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் உயிர் பலி போன்ற விபத்துக்களை தடுக்கலாம். பெற்றோர்களும் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை நீர் நிலைகள் பக்கம் செல்லக் கூடாது என எச்சரித்து கண்காணிக்க வேண்டும்.
இதுஒருபுறம் இருக்க ஊருணிக்கு வரும் மழை நீரில் ஊரில் உள்ள அனைத்து கழிவுகளும் வருகிறது. சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் சுகா தாரக்கேடு ஏற்படுகிறது.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் குழந்தைகளை தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குளிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த தண்ணீரை குடிப்பதற்கும் சில கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் சுகாதார பிரச்னை ஏற்படுவதால் விழிப்புணர்வு அவசியமாகிறது. இதுபோன்ற நீர்நிலைகளில் குளித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.