/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்காணியுங்க *கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர் *தேவை உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கை
/
கண்காணியுங்க *கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர் *தேவை உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கை
கண்காணியுங்க *கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர் *தேவை உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கை
கண்காணியுங்க *கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை ஜோர் *தேவை உணவு பாதுகாப்புத்துறையின் நடவடிக்கை
ADDED : ஏப் 05, 2025 05:12 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி அருகே உள்ள தின்பண்ட கடைகள், மளிகை கடைகள், உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ஆய்வு தொய்வு காரணமாக காலாவதி பொருட்கள்,கலப்பட உணவு பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது.
மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவு பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மசாலா பாக்கெட்கள், தின்பண்டங்கள் போன்ற உணவுப் பொருட்கள் பல மாதங்களாக விற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதி ஆனது கூட தெரியாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இது கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமையும் முக்கிய காரணமாக உள்ளது.பொருட்களை வாங்கும் சிலர் அந்த பாக்கெட்களில் உள்ள காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரி மையாளர்களை கண்டித்து செல்கின்றனர்.
காலாவதி தேதியை பார்க்க தெரியாத சில முதியவர்களும், சிறுவர்களும் அறியாமையால் அந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உணவு பொருள் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உணவு பொருட்களில் நிறுவனத்தின் பெயர், விலாசம் உள்ளிட்ட பல விஷயங்களை பெரிதாக காட்டுகின்றனர். ஆனால் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கண்ணுக்கு தெரியாத வகையில் ஏதாவது ஒரு மூலையில் பாக்கெட்களில் பிரின்ட் செய்கின்றனர். காலாவதி உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் எப்போது கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் முதலில் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும்.
...................
நடவடிக்கை எடுங்க
காலாவதி உணவுப் பொருட்கள், கலப்படஉணவுப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிகளின் அருகே உள்ள தின்பண்ட கடைகள், உணவகங்களில் தரமற்ற உணவுகளையும், பள்ளி சிறுவர்களை கவர்ந்திழுக்க அதிகமான நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் விற்பனை செய்கின்றனர். இதனால் பள்ளி சிறுவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளின் அருகே உள்ள கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். விபரீதங்கள் நிகழும் முன் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.எம்.பூமி அம்பலம், மாநில மாணவரணி செயலாளர், தமிழர் தேசம் கட்சி,நத்தம்.