/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள்
/
மழை பெய்தும் நிரம்பாத நீர்நிலைகள்
ADDED : நவ 03, 2024 04:24 AM
ஒட்டன்சத்திரம் :ஒட்டன்சத்திரம் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்த போதிலும் நீர்நிலைகள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் விருப்பாச்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் உட்பட பல குளங்கள் உள்ளன.
குளங்களில் உள்ள நீரை கொண்டு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும் ஆயிரக்கணக்கான நிலங்கள் நிலத்தடி நீர்மட்டம் மூலமும் பாசன வசதி பெறுகின்றன.
ஒட்டன்சத்திரம் பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தும் மேலே கூறப்பட்ட நீர்நிலைகளுக்கு இன்னும் தண்ணீர் வரத்து ஏற்படவில்லை.
மழையினால் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் சில குளங்களுக்கு நீர் வரத்து ஏற்படும். மேலும் பரப்பலாறு அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரைக் கொண்டு பல குளங்கள் நிரம்பும். ஆனால் பரப்பலாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 கனஅடி உள்ள நிலையில் அதே அளவு நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. 90 அடியாக உள்ள இந்த அணை தற்போது 76 அடியாக உள்ளது.
காட்டாற்று வெள்ளம் ஏற்படாமலும் அணை நிரம்பி மறுகால் செல்லாமலும் உள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.