/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழிச்சாலையோர நீர் வழித்தடங்கள் மாயம் : நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அபாயம்

ADDED : ஜூன் 12, 2025 02:33 AM

மாவட்டத்தில் கமலாபுரம்-மெட்டூர் ரோடு ,திண்டுக்கல்- பழநி ரோடு, கரூர்- திண்டுக்கல் ரோடு, நத்தம்-துவரங்குறிச்சி ரோடு தடங்களில் நான்கு வழிச்சாலை,புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல், காமலாபுரம் தடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் நான்கு வழிச்சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. இருப்பினும் அடுத்த சில வாரங்களிலே இவற்றில் பெரும்பாலான வழித்தடங்கள் குண்டும் குழியுமாக சேதமடைந்தபோதும் ரோடு பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை.
மலைத்தொடர் பகுதிகளில் இருந்து முக்கிய குளம், கண்மாய் போன்ற நீராதாரங்களுக்கான வாய்க்கால்கள் அமைந்துள்ளன. இதற்காக பல இடங்களில் அதிகபட்சமாக 60 அடி வரை அகலமுள்ள வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன .இவை பராமரிப்பின்றி துார்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் ரோடு பணியின்போது பல இடங்களில் வாய்க்கால்கள் முழுமையாக மூடப்பட்டு நீர் ஆதாரங்களுக்கான வரத்து நீர் வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வருவாய் துறை மூலம் உரிய அளவீடு செய்து வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் மேற்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.