/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் குழாய்கள் அமைப்பு
/
ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் குழாய்கள் அமைப்பு
ADDED : பிப் 01, 2024 04:15 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 3,4வது பிளாட்பாரங்களில் தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளநிலையில் செப்டம்பரில் 3,4வது பிளாட்பாரத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதை தொடர்ந்து ரயில்களில் தண்ணீர் நிரப்புவதற்காக இருந்த தண்ணீர் குழாய்கள் சீரமைக்காமல் அப்படியே இருந்தது. இதனால் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் உத்தரவில் 3,4வது பிளாட்பாரத்தில் செல்லும் ரயில்கள் பயனடையும் வகையில் தண்ணீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.