/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாரச்சந்தை இடமாற்றம்: வெளியூர் வியாபாரிகள் புறக்கணிப்பு
/
வாரச்சந்தை இடமாற்றம்: வெளியூர் வியாபாரிகள் புறக்கணிப்பு
வாரச்சந்தை இடமாற்றம்: வெளியூர் வியாபாரிகள் புறக்கணிப்பு
வாரச்சந்தை இடமாற்றம்: வெளியூர் வியாபாரிகள் புறக்கணிப்பு
ADDED : நவ 25, 2024 05:05 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் வாரச்சந்தை இடமாற்றத்தால் வெளியூர் வியாபாரிகள் வராமல் புறக்கணித்தனர். இதனால் காய்கறிகள் இரு மடங்கு விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் பி.டி., ரோட்டில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
நகராட்சி வாரச்சந்தையை புதுப்பிக்க கட்டுமான பணியை முன்னறிவிப்பின்றி தொடங்கியது. அதிகம் போக்குவரத்துள்ள இப்பகுதியில் வாரசந்தை செயல்படுவது பொருத்தமாக இருக்காது என்பது பொதுமக்கள், வியாபாரிகளின் கருத்தாகும். நேற்று அண்ணாசாலையில் வாரச்சந்தை செயல்பட்ட நிலையில் வத்தலக்குண்டு, தேனி ,பெரியகுளம், திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் வாரச்சந்தை இடமாற்றம் தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என புறக்கணித்தனர். உள்ளூர் வியாபாரிகள் கடைகளை அமைத்தனர். வெளியூர் வியாபாரிகள் வராததை காரணம் காட்டி காய்கறியின் விலைகள் இரு மடங்கு உயர்த்தப்பட்டது.
தக்காளி காலையில் கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் ரூ.100க்கு விற்கப்பட்டது. பீன்ஸ். கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்டவை தலா கிலோ ரூ.100க்கு, கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது. பழ வகைகளும் இரு மடங்கு விலை உயர்ந்தது. வாரச்சந்தையை பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஏற்றார் போல் வேறு இடத்தில் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.