/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கலை ரத்து செய்த வெல்லம்பட்டி; அம்மை நோய் பாதிப்பால் மக்கள் முடிவு
/
பொங்கலை ரத்து செய்த வெல்லம்பட்டி; அம்மை நோய் பாதிப்பால் மக்கள் முடிவு
பொங்கலை ரத்து செய்த வெல்லம்பட்டி; அம்மை நோய் பாதிப்பால் மக்கள் முடிவு
பொங்கலை ரத்து செய்த வெல்லம்பட்டி; அம்மை நோய் பாதிப்பால் மக்கள் முடிவு
ADDED : ஜன 14, 2025 10:55 PM

கன்னிவாடி; திண்டுக்கல் மாவட்டம் வெல்லம்பட்டியில் அம்மை பாதிப்பு அதிகரிப்பால் பொங்கல் வழிபாடு கொண்டாட்டங்களை கிராமத்தினர் தவிர்த்துள்ளனர்.
ரெட்டியார்சத்திரம் அருகே கோனுார் வெல்லம்பட்டியில் 200க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிராமங்களுக்கே உரிய பாரம்பரிய வழக்கப்படி வீடுதோறும் பொங்கல் வழிபாடு மட்டுமின்றி கிராம தெய்வங்களின் கோயில்களில் தனித்தனியே பொங்கல் அபிஷேகம் ,தீபாராதனை நடத்துவர்.மாட்டுப்பொங்கல் நாளில் மாடுகள் அலங்கரிப்பு விளையாட்டுப் போட்டிகள் , கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இங்கு சில நாட்களாக அம்மை நோய் பாதிப்பு அவ்வப்போது தென்பட 7க்கு மேற்பட்ட வீடுகளில் அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கிராமத்தினர் பொங்கல் விழா கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்தனர். இதற்கேற்ப நேற்று நடந்த பொங்கல் வழிபாடு, கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளனர்.
வியாபாரி வீரமணி கூறுகையில் ,'' ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் துவக்கமாக கிராமத்திற்கென நுழைவாயில்களில் காப்பு கட்டுவதில் துவங்கி வீடுகள், குல தெய்வம், கிராம தெய்வ கோயில்களில் வழிபடுவது வழக்கம். இந்தாண்டு அம்மை பாதிப்பு அதிகரிப்பால் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டிய சூழல் எழுந்தது. கிராமத்தினர் சார்பில் விழா சார்ந்த அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தைப்பூச தினத்திற்குள் இந்த பாதிப்பு கட்டுப்பாட்டில் வரும் சூழலில் கோயில்களுக்கான பொங்கல் வழிபாடுகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்''என்றார்.
மக்கள் எடுத்த முடிவு
தொழில் முனைவோர் மனோஜ்குமார் கூறுகையில்,'' அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக கிராம மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொங்கல் விழா கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டிய நிலை உருவானது. கலை, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தவில்லை ''என்றார்.