/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காவிரி நீரை கொண்டு குளங்களை நிரப்பும் வாக்குறுதி என்னாச்சு; 5 ஆண்டுகள் முடிவு பெற உள்ளதால் மக்கள் அதிருப்தி

ADDED : ஏப் 13, 2025 04:05 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் வேடசந்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட சில தாலுகாக்கள் வறட்சிப் பகுதியாக வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. மழைக்காலத்தில் மட்டுமே விவசாயத்தை மேற்கொள்ளும் பெரும்பாலான விவசாயிகள் மற்ற காலங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வறட்சி காலங்களில் குடிப்பதற்கு கூட குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது காவிரி குடிநீர் ஓரளவு கை கொடுக்கிறது. இருந்தும் பெரும்பாலான மக்கள் வாகனங்களில் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைதான் குடம் ரூ. 15 கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுப்பட்டு விட்டது என்பதேயாகும்.
வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகா பகுதிகளில் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு தி.மு.க., தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் காவிரி நீரை கொண்டு வந்து அனைத்து குளங்களை நிரப்புவோம். விவசாயம் செழிப்பதுடன் மக்கள் குடிநீர் பிரச்னையின்றி கால்நடை வளர்ப்பிலும் தங்களது கவனத்தை செலுத்தலாம் என்ற நோக்கில் வாக்குறுதி கொடுத்தார். தி.மு.க., வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ., வுமான காந்திராஜனும் தொகுதி முழுவதும் இதையே வாக்குறுதியாக கொடுத்தார்.
4 ஆண்டுகளில் இதற்கான ஆய்வு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் இதே திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளையும் இணைக்க முடிவானது.இதற்கான ஆய்வுகள் நடந்ததாகவும் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதுதான் இப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளதோடு அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.