/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்னங்க சார் உங்க சட்டம்; துணை முதல்வர் வருகிறார் என்றதும் பணிகளில் துரிதம்; குப்பை அள்ளுதல் முதல் ஆக்கிரமிப்பு அகற்றமும் ஜோர்

ADDED : அக் 20, 2024 05:34 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகிறார் என்றதும் குப்பை அள்ளுவது தொடங்கி ஆக்கிரமிப்பு அகற்றம் வரை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் எப்போதுமே இந்த பணிகளை செய்ய வேண்டியது தானே என கேள்விகளை எழுப்புகின்றனர்.
துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி திண்டுக்கல்லுக்கு இன்று மாலை வருகிறார். இரவு தங்கும் அவர் நாளை காலை நத்தத்தில் நடக்கும் தி.மு.க., நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையொட்டி அவர் வரும் பாதையில் உள்ள ரோடுகளில் பேட்ச் ஒர்க், ரோடுகளை சுத்தப்படுத்துவது, சாக்கடைகளை துார்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வாரியாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அவசரகதியில் செய்யப்படும் இது போன்ற பணிகளால் எதுவும் தரமாக இருப்பதில்லை. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது துணை முதல்வர் வருகைக்காக செய்யப்படும் பணிகள் அனைத்துமே பொதுமக்கள் எப்போதும் நடக்க வேண்டுமென என எதிர்பார்க்கும் பணிகள் தான். இத்தனை நாட்கள் நிதிப்பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என காரணங்களை அடுக்கி வந்த அதிகாரிகள் தற்போது மட்டும் எப்படி தீவிரமாக பணியாற்றுகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.சாக்கடைகளை துார்வார வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டுமென பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் எல்லாம் தற்போது நடக்கிறது. இதுவும் போர்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இது போன்ற பணிகளை துணை முதல்வர் வருகிறார் என்றதும் செய்யும் அதிகாரிகள் மக்களுக்காக எப்போதும் இது போன்று சுறுசுறுப்புடன் பணி ஆற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.