/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடப்பதற்கே பயனற்றுப்போன காமாட்சிபுரம் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையை புதுப்பிப்பது எப்போது
/
நடப்பதற்கே பயனற்றுப்போன காமாட்சிபுரம் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையை புதுப்பிப்பது எப்போது
நடப்பதற்கே பயனற்றுப்போன காமாட்சிபுரம் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையை புதுப்பிப்பது எப்போது
நடப்பதற்கே பயனற்றுப்போன காமாட்சிபுரம் ரோடு போக்குவரத்து நிறைந்த சாலையை புதுப்பிப்பது எப்போது
ADDED : செப் 19, 2024 05:23 AM

வேடசந்துார்: அகரம் பேரூராட்சி விட்டல் நாயக்கன்பட்டியில் இருந்து காமாட்சிபுரம் செல்லும் 2 கி.மீ., தார் ரோடு மெட்டல் ரோடாக கற்கள் நிறைந்த பகுதியாக மாறிவரும் நிலையில் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் வேடசந்துார் மெயின் ரோட்டில் ஆத்துார் தொகுதிக்கு உட்பட்டது அகரம் பேரூராட்சி. இங்குள்ள விட்டல்நாயக்கன்பட்டி மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது காமாட்சிபுரம் . இந்த ரோடு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது . தற்போது தார் ரோடு என்பதற்கான அடையாளம் மட்டுமே ஆங்காங்கே தெரியும் வகையில், ரோடு சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாகத்தான் பள்ளி கல்லுாரி மாணவர்கள் ,நுாற்பாலை தொழிலாளர்கள், கடைகளுக்கு சென்று வருவோர், டூவீலரில் காய்கறி கொண்டு செல்லும் விவசாயிகள் என அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அகரம் பேரூராட்சி நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்காமல் கண்டும், காணாமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே பலமுறை மனுவும் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
காவிரி நீரும் வரல
வி.முத்துசாமி, விவசாயி, காமாட்சிபுரம்: ரோடு சேதம் குறித்து பலமுறை புகார் தெரிவித்து விட்டோம். டூவீலரில் கூட செல்ல முடியவில்லை. பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி பகுதிக்குள் இருந்தும் இதுவரை காவிரி குடிநீர் விநியோகமும் இல்லை.
நடந்து செல்வவே சிரமம்
ஆர்.பழனிச்சாமி, விவசாயி, காமாட்சிபுரம்: இந்த பகுதி மக்களுக்கான முக்கிய தேவையே இந்த ரோடு வசதி தான். ரோடு படு மோசமாக சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் கேட்கத் தேவையில்லை. ரோட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். நடந்து செல்வதே சிரமம் தான். தற்போது வாகன போக்குவரத்து வேறு அதிகரித்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
சிமென்ட் ரோடு கூட இல்லை
ஆர்.மல்லிகா, குடும்பத் தலைவி, காமாட்சிபுரம்: காமாட்சிபுரத்திற்கு வரும் ரோடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டில் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதை போல் இப்பகுதிக்கான குடிநீர் உவர்ப்பு நீராக உள்ளதால் குடிநீருக்கும் பயன்படுவதில்லை. மக்கள் ஒரு குடம் நீரை ரூ.15 கொடுத்து வாங்குகின்றனர். ஊருக்குள் ஒரு சிமென்ட் ரோடு வசதி கூட இல்லை.