/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் கடைகளில் இல்லை மண்ணெண்ணெய் சப்ளை ஏன் இந்த அலட்சியம்; தொடரும் அலைக்கழிப்புகளால் பொதுமக்கள் தவிப்பு

ADDED : செப் 03, 2025 01:03 AM

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் விரகு அடுப்புகளும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் புழக்கத்தில் இருந்தன. காலமாற்றம் காரணமாக தற்போது 80 சதவீதம் வீடுகளில் காஸ் அடுப்புகள் உபயோகத்தில் வந்து விட்டன. இதனால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது.ரேஷன் கார்டுகளில் சிலிண்டர் இணைப்பு இல்லாத கார்டுகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் வினியோகம் என்பதால் இவ்வாறான கார்டுகள் ஒரு ரேஷன் கடைக்கு 10 முதல் 20க்குள் தான் உள்ளன. மண்ணெண்ணெய் ரேஷன் கார்டுதாரர்களும் ஒரு ஊராட்சிக்கு குறைந்தது 100 க்கு குறையாமல் உள்ளனர்.
இவர்களுக்கான மண்ணெண்ணெய்யை அந்தந்த கடைகளுக்கு விநியோகம் செய்வது இல்லை. அந்தந்த சொசைட்டி சேல்ஸ்மேன்களே நிலக்கோட்டையில் உள்ள மண்ணெண்ணெய் பங்கிற்கு சென்று சொசைட்டிக்கு தேவையான மண்ணெண்ணெய்யை லிட்டர் கணக்கில் கேன்களில் பி டித்து வருகின்றனர். இதற்காக அந்தந்த பகுதியை சேர்ந்த 4, 5 சொசைட்டி சேல்ஸ் மேன்கள் சேர்ந்து வாகனம் பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது முதியவர்களுக்கான ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நிலையில் நிலக்கோட்டை சென்று மண்ணெண்ணெய் பிடித்து வந்து வழங்குவதில் சிரமம் உள்ளதாகவும், பயனாளிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வாக அந்தந்த சொசைட்டிகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகத்தை கனரக வாகனத்தில் கொண்டு சென்று சொசைட்டி வாரியாக லிட்டர் கணக்கீட்டின்படி ஊற்றி வந்தால் ஊழியர்கள் மட்டுமின்றி மண்ணெண்ணெய் பெறும் பொது மக்களும் காலாகாலத்தில் பயன் பெறுவர் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.