/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த சோதனை...: ஆடி பிறக்கும் நிலையிலும் சுட்டெரிக்கும் வெயில்: வெப்பத்தால் நோய் தொற்றுக்கு ஆளாகும் மக்கள்

ADDED : ஜூலை 13, 2025 12:24 AM

மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வறட்சி நீடித்தாலும் கடந்த காலங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. ஆனால் நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாத நிலையில் தற்போது கடும் வறட்சி , வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது.
பொதுவாக ஆனி பிறந்தாலே சீதோஷ்ணநிலை மாறி சாரல் மழையுடன் குளிர் தொடங்கி விடும் .ஆனால் ஆடி பிறப்பதற்கு முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் மதிய நேரங்களில் கடும் வெப்ப தாக்கம் ஏற்படுகிறது.கடும் வெயில் மட்டுமின்றி வெப்ப காற்று அனலாக வீசுகிறது. இதனால் விவசாய தொழிலாளர்கள் ,100 நாள் வேலை தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வெப்ப சலனத்தால் கொப்புளங்கள் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. கால்நடைகள் கூட வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பவில்லை.திண்டுக்கல் கரூர், திண்டுக்கல் குஜிலியம்பாறை, மதுரை நத்தம் ரோடு என அனைத்து ரோடுகளிலும் இருந்த ரோட்டோர மரங்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டு விட்டன.இதனால் வாகனப் பயணத்திலும் வெப்ப காற்றே மூச்சு காற்றாக மாறி உடல் உபாதைகள் தொடர்கிறது.