/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகரிக்கும் பதநீர் விற்பனை ஆய்வு செய்யுமா உணவுத்துறை
/
அதிகரிக்கும் பதநீர் விற்பனை ஆய்வு செய்யுமா உணவுத்துறை
அதிகரிக்கும் பதநீர் விற்பனை ஆய்வு செய்யுமா உணவுத்துறை
அதிகரிக்கும் பதநீர் விற்பனை ஆய்வு செய்யுமா உணவுத்துறை
ADDED : மார் 18, 2025 05:25 AM
திண்டுக்கல்: கோடை காலத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரோட்டோரங்களில் பதநீர் பெயரில் ஏதோ ஒரு பானத்தை பொது மக்களிடம் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதை உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கோடை காலம் தொடங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் நீர்ச்சத்து குறைந்து தண்ணீர் தாகத்துடன் சுற்றுகின்றனர். சிலர் வீடுகளிலிருந்து தண்ணீர், ஜூஸ் போன்றவைகளை கொண்டு வந்து தாகத்தை தீர்த்து கொள்கின்றனர். மற்றவர்கள் ரோட்டோரங்களில் திடிரென முளைத்திருக்கும் குளிர்பான கடைகள், ஜூஸ் கடைகளில் குளிர்பானங்களை குடித்த தாகம் தீர்க்கின்றனர். திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து சில வியாபாரிகள் விற்பனைக்காக பதநீர் என்ற ஏதோ ஒரு பானத்தை கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய ரோட்டோரங்களில் அமர்ந்து விற்கின்றனர்.
இதை வாங்கி குடிக்கும் பொது மக்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகும் நிலை தொடர்கிறது.
இது உண்மையான பதநீரா, வியாபார லாபத்திற்காக கொண்டு வரும் ரசாயன பானமா என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். உணவுத்துறை அதிகாரிகள் இப்பிரச்னை மீது கவனம் செலுத்தி ரோட்டோரங்களில் பதநீர் விற்கும் வியாபாரிகளிடம் உள்ள பதநீர் துாய்மையாக உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் கூறியதாவது: திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் விற்கப்படும் பதநீரை ஆய்வு செய்யப்படும். தவறுகள் எதுவும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.