/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தொழிலாளி தற்கொலை
/
ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த தொழிலாளி தற்கொலை
ADDED : டிச 22, 2024 02:27 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் குட்டியப்பட்டி பூஞ்சோலையில் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கூலித்தொழிலாளி அருண்குமார் 22, தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கூலிவேலைகளுக்கு சென்று இடைவேளை நேரங்களில் தனது அலைபேசியில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
சில நேரங்களில் அதில் வெற்றியும் பெற்றதால் ஆசை அவரை விடாததால் தொடர்ந்து விளையாடினார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விளையாடிய அவர் அதிக பணத்தை இழந்தார். இதனால் மனமுடைந்த அருண்குமார் நவ.30ல் வீட்டிலிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து டிச.14ல் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.