ADDED : ஜூன் 23, 2025 09:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே எல். வலையபட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரதாப் 30.
இவர் நேற்று காலை தனது பைக்கில் வத்திபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். பேட்டைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கொட்டாம்பட்டியை சேர்ந்த ஜெகதீஷ் 20, என்பவர் ஓட்டி வந்த பைக்கும், பிரதாப் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஜெகதீஷ் படுகாயங்களுடன் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.