ADDED : டிச 01, 2024 04:44 AM
திண்டுக்கல் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு,கட்டுப்பாடு அலகு சார்பில் திண்டுக்கல்லில் ஊர்வலம் ,அரசு மருத்துவ கல்லுாரியில் கருத்தரங்கம் நடந்தது.
இணை இயக்குனர் பூமிநாதன் துவக்கி வைத்தார். துணை இயக்குனர் , மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு அலுவலர் முத்துபாண்டியன் வரவேற்றார்.
மருத்துவ கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். எச்.ஐ.வி.,எய்ட்ஸால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆத்துார் அரசு மருத்துவமனை ஆற்றுநர் கண்ணன் எழுதிய கவிதை நுாலை மருத்துவ கல்லுாரி முதல்வர் வெளியிட காசநோய் பிரிவு துணை இயக்குநர் பெற்றுக்கொண்டார். மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, துணை இயக்குனர் கவுசல்யா தேவி, மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவ அலுவலர்கள் பத்மாவதி, ரம்யா செஞ்சிலுவை சங்க துணை தலைவர் சேக்தாவுத் பங்கேற்றனர்.எய்ட்ஸ் கட்டுபாட்டு மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா நன்றி கூறினார்.