தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கோயில்களில் கிருத்திகை வழிபாடு

கோயில்களில் கிருத்திகை வழிபாடு

கோயில்களில் கிருத்திகை வழிபாடு


ADDED : அக் 01, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 01:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்: புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் சுவாமிக்கு பாலாபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.

கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.பழநி: பழநி முருகன் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஆறுகால பூஜைகள் நடந்தது. மாலை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமார சுவாமி புறப்பாடு நடந்தது. வெளிபிரகாரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்

நடந்தது.

நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர்.

நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி,வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடுகள்

நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us